-->
அலகு – 2 அரசியல் கட்சிகள்: படம், படவிளக்கம் தொடங்குகிறது. அரசியல் கட்சிகள் பாடத்தலைப்புக்காக தமிழ்நாடு அரசு தலைமைச் செயலக முகப்புப் படமும், இந்தியப் பாராளுமன்றத்தின் முகப்புப் படமும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன, படவிளக்கம் முடிவடைகிறது.
கற்றலின் நோக்கங்கள்
அரசியல் கட்சி என்பதை வரையறை செய்தல் மற்றும் அதன் முக்கியத்துவத்தை அறிதல்
அரசியல் கட்சியின் பங்கு மற்றும் செயல்பாட்டினை தெரிந்துகொள்ளல்
இந்தியாவில் கட்சி முறையையும் எதிர்க்கட்சியின் பங்கினையும் அறிந்துகொள்ளுதல்
உரையாடல்: [AUDIO ENABLED]மாணவன் சிவாவும் ஆசிரியை ஆதியும் பேசிக்கொள்ளும் உரையாடல் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.
மாணவன் சிவா: வணக்கம் அம்மா. நான் உள்ளே வரலாமா?
ஆசிரியை ஆதி: வணக்கம் சிவா. எப்போதும் சரியான நேரத்திற்கு வருகைதரும் நீ இன்று ஏன் தாமதம்?
சிவா: மன்னிக்க வேண்டும் அம்மா. ஒரு ஊர்வலத்தின் காரணமாக எனக்கு தாமதம் நேரிட்டது.
ஆதி: என்ன ஊர்வலம் அது? யார் ஏற்பாடு செய்தது?
சிவா: அது ஒரு அரசியல் கட்சியின் ஏற்பாடு என்று எனது மாமா சொன்னார்.
ஆதி: அப்படியா?
சிவா: அரசியல் கட்சி என்றால் என்ன அம்மா? ஏன் அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள்?
ஆதி: காத்திரு. இன்று அரசியல் கட்சிகளைப் பற்றிதான் பாடம் நடத்த உள்ளேன்.அவற்றைப் பற்றி நாம் அறிந்து கொள்வோம்.
ஆரம்பக் காலங்களில் பேரரசர்களும் அரசர்களும் ஆட்சி செய்தனர். அரசர், சட்டம் இயற்றுதல், நிர்வாகம், நீதி வழங்குதல் ஆகியவற்றின் தலைமையிடமாக இருந்தார். நிர்வாகம் அவர் ஒருரின் கையில் மட்டுமே இருந்தது. மக்களின் நலன் என்பது அரசரை பொருத்துதிருந்தது. மக்கள் அரசருக்கு எதிராக செயல்படும் உரிமையை பெற்றிருக்கவில்லை. பின்னர் அன்னிய நாடுகள் இந்தியாவை குடியேற்ற நாடாக உருவாக்கின. குடியேற்ற நாடுகள் பின்னர் சுதந்திர நாடுகளாக அறிவிக்கப்பட்டன.
இந்தியா 1950ஆம் ஆண்டு மக்களாட்சி நாடானது. துடிப்பான ஒரு மக்களாட்சி நாட்டிற்கு ஒரு வலிமையான அரசியல் கட்சி முறை அவசியமான ஒன்றாகும். கட்சி முறை என்பது நவீனகால தோன்றல் ஆகும். மக்களாட்சியில் மக்கள் எந்த செயல்பாடுகள் குறித்தும் தங்களது கருத்துக்களை வெளியிடலாம்.
அரசியல் கட்சிகள் என்றால் என்ன?: [AUDIO ENABLED] அரசியல் கட்சிகள் என்பவை தன்னார்வத்தோடு ஏற்படுத்தப்பட்ட தனி மனிதர்களின் அமைப்பு ஆகும். இவை பரந்த கருத்தியல் அடையாளங்களோடு சில கொள்கைகளை ஏற்றுக்கொண்டு சமூகத்திற்கான திட்டங்களையும் நிரல்களையும் வடிவமைக்கின்றன.
மேலும் அரசியல் கட்சிகள் மக்களின் ஆதரவை பெற்று தேர்தலில் வெற்றிபெறுவதன் மூலம் தமது கொள்கைகளை நடைமுறைப்படுத்துகின்றன. அவற்றின் அளவு, அமைப்பு மற்றும் கொள்கை ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபடுகின்றன.
எந்த ஒரு அரசியல் கட்சியும் பின்வரும் மூன்று அடிப்படைக் அங்கங்களைக் கொண்டிருக்கும். தலைவர், செயல் உறுப்பினர்கள், தொண்டர்கள்.
அரசியல் கட்சிகளின் முக்கியத்துவம்: அரசியல் கட்சிகள் மக்களாட்சியின் முதுகெலும்பு எனலாம். அரசியல் கட்சிகள் முறையாக அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இல்லாமல் அரசாங்கத்தை அமைக்கும் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. அவை பொதுகருத்துக்களை உருவாக்குகின்றன. கட்சிகள் குடிமக்களுக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் இடையே பாலமாக சேவை செய்கின்றன.
ஒரு கட்சி அங்கீகரிக்கப்படுவது எவ்வாறு எனில் ஐந்து ஆண்டுகளாக அக்கட்சி அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்க வேண்டும்.அக்கட்சி வேட்பாளர்கள் குறைந்தபட்சம் 6% வாக்குகளை இறுதியாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெற்றிருத்தல் வேண்டும்.
அரசியல் கட்சிகளின் பண்புகள்:அரசியல் கட்சிகளின் பண்புகள் அரசியல் கட்சிகள் என்பது பொதுவான குறிக்கோள்கள் மற்றும் பகிர்ந்தளிக்கப்பட்ட மதிப்பீடுகளை கொண்ட மக்கள் குழுக்களாக இருக்கின்றன.
தனக்கென கொள்கை மற்றும் திட்டங்களை கொண்டிருக்கின்றன.
அரசியல் அமைப்பின் வழியாக மட்டுமே அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கின்றன.
தேசியம் மற்றும் தேசிய நலன்களை மேம்படுத்த முயற்சிக்கின்றன.
கட்சியின் தேர்தல் அறிக்கை:
தேர்தலுக்கு முன்பான பரப்புரையில் வேட்பாளர்கள் தங்களது கட்சி ஆட்சிக்கு வந்தால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள், கொள்கைகளை அறிவிப்பார்கள்.
கட்சி முறைகளின் வகைகள்: மூன்று வகையான கட்சி முறைகள் நடைமுறையில் இருக்கின்றன.
ஒரு கட்சி முறை இம்முறையில் ஒரே அரசியல் கட்சி மட்டும் அரசாங்கத்தை ஏற்படுத்தும் உரிமையைக் கொண்டிருக்கும். இவ்வகையான ஒரு கட்சி முறை பொதுவுடைமை நாடுகளான சீனா, வடகொரியா மற்றும் கியூபா ஆகிய நாடுகளில் நடைமுறையில் இருக்கின்றன. படம், அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து கருத்து வரைபடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதிலுள்ள கருத்துகள் பின்வருமாறு, அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள்:
வழங்குதல், நேர்மையான எதிர்ப்பு, பொறுப்புடைமை, ஸ்திரத்தன்மை வழங்குதல்.
பரிந்துரைத்தல், தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலகத்திற்கு தனி நபரை பரிந்துரைத்தல்.
ஏற்பாடு செய்தல், அரசியல் பிரச்சாரம், பேரணி ஆகியவற்றை ஏற்பாடு செய்தல், தேர்தலில் வெற்றிபெற தேர்தல் அறிக்கையை வெளியிடுதல்.
ஊக்குவித்தல், மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களையும் கொள்கைகளையும் முன்வைத்தல்.
ஒருங்கிணைத்தல், சமுதாயத்தையும் அரசையும் இணைத்தல். தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களை ஒருங்கிணைத்தல்.
ஆட்சி அமைத்தல், அரசாங்கத்தை ஏற்படுத்தி இயக்குதல். பொதுவான கொள்கையை உருவாக்குதல்.
இரு கட்சி முறை: [AUDIO ENABLED] இம் முறையில் இரண்டு கட்சிகள் அதிகாரத்தை பங்கு கொள்ளும் வகையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும். இவற்றில் ஒன்று ஆளும் கட்சியாகவும் மற்றொன்றுஎதிர்க்கட்சியாகவும் செயல்படும். இருகட்சி முறை, பிரிட்டன் (தொழிலாளர் கட்சி மற்றும் பழமைவாதக் கட்சி), அமெரிக்க ஐக்கிய நாடுகளில் (குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி) காணப்படுகின்றன.
பல கட்சி முறை
அதிகாரத்திற்கான போட்டி மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கட்சிகளிடையே இருக்குமாயின் அது பல கட்சி முறை என அழைக்கப்படுகிறது. இம்முறை இந்தியா, பிரான்ஸ், சுவீடன், நார்வே உள்ளிட்ட நாடுகளில் காணப்படுகிறது.
இந்தியாவில் அரசியல் கட்சி முறை: [AUDIO ENABLED] கூட்டாட்சி அமைப்பினை பின்பற்றும் நாடுகளில் இருவகையான கட்சிகள் காணப்படுகின்றன. இந்தியாவில் கட்சி முறை பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றியது. உண்மையில் இந்தியாவில், உலகின் அதி எண்ணிக்கையிலான கட்சிகள் காணப்படுகின்றன. இந்தியாவில் கட்சிகள் மூன்று படிநிலையில் அமைந்திருப்பதை நாம் காணலாம். அவை தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத (சுயேட்சைகள்) கட்சிகள் ஆகும். ஒவ்வொரு கட்சியும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும்..
தேர்தல் ஆணையம் - சட்டபூர்வ அமைப்பு: இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல்களை நடத்துவதற்கு அதிகாரம் கொண்ட ஒரு சுதந்திரமான, சட்டப்படியான அமைப்பு ஆகும். இதன் தலைமை இடம் புதுதில்லியில் அமைந்துள்ளது.
படம், தேர்தல் ஆணையச் சின்னம் இங்கே தரப்பட்டுள்ளது, ஆரஞ்சு, வெள்ளை, பச்சை நிற செவ்வப்பட்டையின் மேல். பகுதியில் வட்டம் உள்ளது, அவ்வட்டம் சாம்பல் நிறத்தில் உள்ளது,
படம், ஒரு அரசியல் கட்சியை தோற்றுவிப்பது எப்படி என்பதற்கானப் படம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது, படவிளக்கம் தொடங்குகிறது. அதில் முதலில் இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும், என்பதைக் குறிக்கும் வகையில் தேர்தல் ஆணையச் சின்னமும், இரண்டாவதாக குறைந்தபட்சம் நூறு உறுப்பினர்கள், அவர்கள் ஒவ்வொருவரும் வாக்காளர் அட்டையை கொண்டிருத்தல் வேண்டும் என்பதைக் குறிக்கும் வகையில் மனிதர்களின் படமும், கட்சி அமைப்பு குறித்த ஆவணத்தை கொண்டிருத்தல் வேண்டும், என்பதைக் குறிக்கும் வகையில், ஒரு சிவப்பு நிற புத்தகமும் இடம்பெற்றுள்ளன. படவிளக்கம் முடிவடைகிறது.
கட்சிகள் அங்கீகரிக்கப்படுவதற்கான நிபந்தனைகள்: [AUDIO ENABLED]
இந்தியாவில் அரசியல் கட்சிகளை அங்கீகரிப்பதற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் சில விதிமுறைகளை வகுத்துள்ளது.
தேசியக்கட்சிகள்
மக்களவைத் தேர்தலில் அல்லது நான்கு மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலில் செல்லத்தக்க மொத்த வாக்குகளில் ஒரு கட்சி 6 சதவீதம் வாக்குகளை பெற்றிருத்தல் வேண்டும். ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட மாநிலங்களில் நான்கு மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும்.
பிராந்திய அல்லது மாநிலக்கட்சிகள்: மாநில சட்டப் பேரவைக்கான தேர்தலில் செல்லத்தக்க வாக்குகளில் குறைந்த பட்சம் 6 சதவீதம் வாக்குகளை பெற்றிருத்தல் வேண்டும். ஒவ்வொரு 25 தொகுதிகளுக்கும் ஒரு மக்களவைத் தொகுதி அல்லது சட்டப் பேரவைத் தேர்தலில் குறைந்தபட்சம் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும். சட்டப் பேரவையில் மொத்த தொகுதிகளில் குறைந்தபட்சம் 3 சதவீதம், தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
சுயேட்சை வேட்பாளர்
சுயேட்சை வேட்பாளர் என்பவர் எந்த கட்சியிலும் சேராமல் தானாக மக்களவை அல்லது மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் நபர் ஆவார்.
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள்
மேலே தெரிவித்த நிபந்தனைகளை பூர்த்தி செய்த கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் என அழைக்கப்படும். அவற்றிற்கு தேர்தல் ஆணையத்தால் சின்னம் ஒன்றும் ஒதுக்கீடு செய்யப்படும். பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சி தாங்கள் விரும்பும் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட முடியாது. இத்தகைய கட்சி தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படும் தேர்தல் குழுவில் (Poll Panel) உள்ள ஏதேனும் ஒரு சின்னத்தை தேர்வு செய்தல் வேண்டும். ஒதுக்கப்பட்ட சின்னம் என்பது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிக்கு மட்டுமானது என பொருள்படும்.ஒதுக்கப்படாத சின்னம் என்பது அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் சின்னம் ஆகும்.
பெரும்பான்மைக் கட்சி: தேர்தலில் ஒரு அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் மற்ற கட்சிகளின் வேட்பாளர்களை விட அதிக எண்ணிக்கையில் தேர்வு பெற்று இருப்பின் அக்கட்சியானது பெரும்பான்மைக் கட்சி என அழைக்கப்படுகிறது.
பெரும்பான்மை பெற்ற கட்சி, அரசாங்கத்தை அமைத்து ஆட்சி நடத்துகிறது. அக் கட்சி அரசு நிர்வாகத்தை நடத்த அமைச்சர்களைத் தேர்ந்தெடுத்து நியமிக்கிறது. அது நாட்டிற்குச் சட்டம் இயற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
படம், படவிளக்கம் தொடங்குகிறது. பெரும்பான்மைக் கட்சியை குறிக்கும் வகையில் 100 என குறிப்பிட்டு நீலம் மற்றும் சிவப்பு நிறத்தில் புள்ளிகள் அரை வட்ட வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. படவிளக்கம் முடிவடைகிறது.
சிறிய கட்சி
சிறிய கட்சி என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் எண்ணிக்கையில் குறைவான எண்ணிக்கையைக் கொண்ட கட்சி ஆகும்.
எதிர்க்கட்சி
தேர்தலில் பெரும்பான்மை பெற்ற கட்சிக்கு, இரண்டாவதாக அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களை கொண்ட கட்சி எதிர்க்கட்சி என அழைக்கப்படுகிறது. மக்களாட்சி வெற்றிகரமாக செயல்படுவதற்கு ஆற்றல் வாய்ந்த எதிர்க்கட்சி மிகவும் அவசியம் ஆகும். அது ஆளும் கட்சி போன்றே முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். எதிர்க்கட்சி ஆளுங்கட்சியின் தன்னிச்சையான போக்கினை கட்டுப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது. அது அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் அறிமுகப்படுத்தப்படும் சட்ட மசோதாக்களை தீவிரமாக விமர்சிக்கும். எதிர்க்கட்சி, அரசின் தவறான கொள்கைகள் மற்றும் தோல்விகளை வெளிப்படுத்தும். அரசால் செயல்படுத்தப்படாத விவகாரங்கள் குறித்து அதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும். எதிர்க்கட்சித் தலைவர் கேபினட் அமைச்சர் அந்தஸ்தைக் கொண்டிருப்பார்.
கூட்டணி அரசாங்கம்: பல கட்சி அமைப்பில் சில நேரங்களில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை ஒரு கட்சி பெறுவதில்லை. இது போன்ற நேர்வில் சில கட்சிகள் இணைந்து அரசாங்கத்தை அமைக்கின்றன. இது கூட்டணி அரசாங்கம் என அழைக்கப்படுகிறது.
படம், கூட்டணி அரசாங்கத்தைக் குறிக்கும் வகையில் பை வரைபடம் கொடுக்கப்பட்டுள்ளது, படவிளக்கம் தொடங்குகிறது. அதில் கட்சி 1, கட்சி 2, மற்றும் கட்சி 3 மூவரும் ஒருவரை ஒருவர் கைக்குளுக்கிக் கொள்வது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. படவிளக்கம் முடிவடைகிறது..
தேர்தல் சின்னங்கள் மற்றும் அவற்றின் முக்கியத்துவம்: [AUDIO ENABLED]தேர்தல் சின்னம் என்பது அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் அங்கீகரிக்கப்பட்ட சின்னம் ஆகும். அது தேர்தலில் ஒரு முக்கிய பங்கினை வகிக்கிறது. தேர்தல் சின்னங்கள் வாக்காளர்களால் எளிதில் அடையாளம் காணவும், புரிந்து கொள்ளவும், நினைவில் கொள்ளவும் மற்றும் அங்கீகரிக்கவும் உதவுகிறது. விலங்குகளின் சின்னங்களை வழங்குவதைத் தேர்தல் ஆணையம் நிறுத்தியுள்ளது. விதிவிலக்காக யானை மற்றும் சிங்கம் ஆகிய சின்னங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. தேசிய அளவிலான அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சின்னம் நாடு முழுவதும் ஒன்றாக இருக்கும். இத்தகைய சின்னங்கள் வேறு எந்த கட்சிக்கும் அல்லது சுயேட்சை நபருக்கும் ஒதுக்கப்படமாட்டாது.
மாநில கட்சிகளுக்கு அந்தக் குறிப்பிட்ட மாநிலத்தில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும். இதனை வேறு எந்த கட்சியும் அந்தக் குறிப்பிட்ட மாநிலத்தில் பயன்படுத்த இயலாது. ஆனால் பல்வேறு மாநிலங்களில் உள்ள மாநிலக்கட்சிகள் தங்களது மாநிலங்களில் இதே போன்ற சின்னத்தை பயன்படுத்தலாம். (உதாரணமாக மகாராஷ்டிராவில் சிவசேனை கட்சி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் வில் மற்றும் அம்பு சின்னத்தை பயன்படுத்துகின்றன).
அட்டவணைத் தொடங்குகிறது.
தேசியக் கட்சி-பிராந்திய அல்லது மாநிலக் கட்சி : தேசியக் கட்சி, தேசியக் கட்சி என்பது இந்தியா முழுவதும் நடைபெறும் தேர்தல்களில் போட்டியிடும் அரசியல் கட்சியாகும் .
தேசியக் கட்சி குறைந்த பட்சம் நான்கு மாநிலங்களில் வலிமை உடையதாக இருக்க வேண்டும் .
இது தனக்கென பிரத்தியேகமான சின்னத்தை நாடு முழுவதற்கும்.
பிராந்திய அல்லது மாநிலக் கட்சி மாநிலக் கட்சிகள் என்பவை ஒரு மாநிலத்திற்குள் நடைபெறும் பல்வேறு தேர்தல்களில் போட்டியிடும் அரசியல் கட்சியாகும்.
பிராந்திய அல்லது மாநிலக் கட்சி ஒன்று அல்லது இரண்டு மாநிலங்களில் வலிமை உடையதாக இருக்க வேண்டும்
பிராந்திய அல்லது மாநிலக் கட்சி இதற்கு அங்கீகரிக்கப்பட்ட ஒரு சின்னம்.
சுருக்கம்:நவீன காலம் என்பது பெரிய சமூகத்தையும் அதிக மக்கள் தொகையையும் கொண்டதாகும். கட்சி முறை என்பது நவீன காலத்தின் தோன்றல் ஆகும்.
பரந்த பொது நலனோடு உள்ள ஒரு குழு தேர்தலில் வெற்றிபெற்று அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தவும், அதன் கொள்கைகளின் மீது செல்வாக்கை செலுத்தவும் முடியும்.
பொதுவாக மூன்று வகையான கட்சி முறைகள் காணப்படுகின்றன. அவை ஒரு கட்சி முறை, இரு கட்சி முறை மற்றும் பல கட்சி முறை.
இந்தியாவில் பல கட்சி முறை நடைமுறையில் உள்ளது.
கட்சியில் உறுப்பினராக இல்லாத ஒருவரும் தேர்ந்தெடுக்கப்படலாம். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர் சுயேட்சை உறுப்பினர் என அழைக்கப்படுவார்.
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் பொறுப்பு வாய்ந்தது ஆகும்..
No comments:
Post a Comment